Publish Date: Wed, 01 Oct 2008 (16:35 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (16:15 IST)
நடிகைகளுக்கு இமேஜ் என்பது கை விலங்கு மாதிரி. அதிலும் ஹோம்லி இமேஜ் அமைந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். புதிய படம் கிடைக்க தலைகீழாக நிற்க வேண்டிவரும்.
அப்படியொரு அவஸ்தையில் இருக்கிறார் ரம்யா நம்பீஸன். ராமன் தேடிய சீதையில் அறிமுகமான இவருக்கு கண்டாங்கி சேலையில் அழுது வடியும் கதாபாத்திரம். பார்க்கிறவர்கள் பாராட்டினாலும் அடுத்தடுத்தப் படங்களில் இவரை ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்களாம்.
கிளாமர் வேடத்துக்கு இவர் செட்டாவாரா என்ற சந்தேகம்தான் இதற்கு காரணம். தற்போது நடித்து வரும் ஆட்ட நாயகனிலும் இவருக்கு குடும்பத்தை காப்பாற்றும் வெயிட்டான ரோல்.
படத்தின் பிற்பகுதியில் மட்டும் சிறிது கிளாமர் காட்டும் வாய்ப்புள்ளதாம். அந்த சிறிது நேரத்தைதான் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீஸன்.