Publish Date: Wed, 01 Oct 2008 (16:34 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (16:04 IST)
அஜித்தின் ஏகன் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு. பில்லா என்ற சூப்பர் ஹிட்டுக்கு பிறகு வெளிவரும் படமென்பது ஒரு காரணம்.
ராஜுசுந்தரம் முதன்முறையாக இயக்கும் படமென்பது இன்னொரு காரணம். படத்தில் அஜித்துடன் நவ்தீப், நயன்தாரா, சுஹாசினி, பியா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தியில் ஹாருக்கான் நடித்த மெய்ன் ஹூன் நா படத்தின் ரீ-மேக் இது.
ஐங்கரன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகிற விஜயதசமி அன்று படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டுள்ளனர். படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.