Publish Date: Wed, 01 Oct 2008 (16:34 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (15:55 IST)
நடிகர் கரண் ஆர்வமுடன் நடிக்க ஒப்புக்கொண்ட படம் அர்த்தநாரி. மலையன், கனகவேல் காக்க, கந்தா என்று வரிசையாக படங்கள் இருந்தும் அர்த்தநாரி படத்தில் நடிக்க ஆர்வமாக ஒத்துக் கொண்டார்.
இதற்கு காரணம் படத்தில் கரணின் கதாபாத்திரம். அர்த்தநாரியில் இவருக்கு அரவாணி வேடம். நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் என்பதால் மற்ற படங்களை ஒதுக்கிவிட்டு அர்த்தநாரிக்காக போட்டோசெஷன் எல்லாம் நடத்தினார். ஆனால் இன்று படத்தின் நிலைமை?
நிச்சயம் சொல்லும்படி இல்லை. படத்தை தயாரிப்பதாக சொன்ன தயாரிப்பாளர் விலகிவிட்டார். வேறு தயாரிப்பாளர்களும் படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை. ஆரவாணி வேடம் போட்ட எந்தப் படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்ற சென்டிமென்ட்தான் இதற்கு காரணம்.