Publish Date: Wed, 01 Oct 2008 (13:31 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (13:31 IST)
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கை நடிகை ஜெனிலியா காதலிப்பதாக நெடுநாளாக பேச்சு.
ஜெனிலியாவின் காதலை தேஷ்முக் நிராகரித்து விட்டார். அதனால் மனம் நொறுங்கிப் போயுள்ளார் ஜெனிலியா என்றும் கூறப்பட்டது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் ஜெனிலியா.
தேஷ்முக்கை காதலிக்கவில்லை, ஒரு நடிகர் என்பதை தாண்டி அவருக்கும் எனக்கும் இடையில் ஏதுவுமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். நடிப்புதான் இப்போதைக்கு அவரது இலக்காம்.
நல்ல முடிவு, வாழ்த்துகள்.