Publish Date: Wed, 01 Oct 2008 (13:28 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (13:28 IST)
கிளாமர் வேடங்களிலிருந்து மீண்டு வருகிறார் த்ரிஷா. ஜோதிகாவுக்கு மொழி அமைந்தது போல் தனக்கொரு படம் அமைய வேண்டும் என்ற ஆசையில் அவர் ஒத்துக்கொண்ட படம்தான் அபியும் நானும்.
கதை ரீதியிலான படம் என்பதால் இதில் மேக்கப் போடாமல் நடித்துள்ளார் த்ரிஷா. இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் மர்மயோகியிலும் மேக்கப் கிடையாதாம். சரித்திர கதையான இதில் மேக்கப் போட வேண்டாம் என்று த்ரிஷாவை கேட்டுக் கொண்டுள்ளாராம் கமல்.
இயற்கை அழகிலும் த்ரிஷா பிரமாதமாகவே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.