Publish Date: Wed, 01 Oct 2008 (13:26 IST)
Updated Date: Wed, 01 Oct 2008 (13:25 IST)
புது முகங்களின் சக்கரகட்டி சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் வார இறுதியில் 28 லட்சம் வசூலித்துள்ளது.
இதற்கு அடுத்த இடம் சரோஜாவுக்கு. சென்ற வார சரோஜாவின் சென்னை வசூல் 25.6 லட்சம்.
மூன்றாமிடத்தில் காதலில் விழுந்தேன். வசூல் 22 லட்சங்கள். சேரனின் ராமன் தேடிய சீதைக்கு நான்காவது இடம். இதன் சென்ற வார வசூல் 10.6 லட்சங்கள்.
பொய் சொல்ல போறோம் ஐந்தாவது இடம். வசூல் 6.4 லட்சங்கள். சென்ற வாரம் வரை பாக்ஸ் ஆஃபிஸில் இடம் பிடித்த தசாவதாரம் டாப் டென்னிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.