சத்யம் சினிமாஸ் படத்தயாரிப்பில் இறங்குகிறது. முதல் படத்தை மணிரத்னத்தின் உதவியாளர் நந்தினி இயக்குகிறார்.
காதல் கதையான இதில் அஞ்சாதே அஜ்மல் ஹீரோ. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
சென்னை திரையரங்கு உரிமையாளர் அபிராமி ராமநாதன் பஞ்சாமிர்தம் படத்தை தயாரித்து வருகிறார். இவர்களைத் தொடர்ந்து மாயாஜாலும் படத்தயாரிப்பில் இறங்கி உள்ளது.