Publish Date: Tue, 30 Sep 2008 (20:29 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (20:29 IST)
இன்றைய சாஃப்ட்வேர் காதலை அதே சாஃப்டுடன் சொல்லும் படம் லீலை. கதைப்படி படத்தின் நாயகனும், நாயகியும், ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறவர்கள்.
இதற்காக ஐ.டி. கம்பெனி போல் அரங்கு ஏதும் அமைக்காமல் பிரபல ஐ.டி. கம்பெனியான HCL-ல் படத்தை எடுத்துள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். படத்தின் இயக்குனர். சிவா மான்சி இருவரும் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள்.
ஆண்ட்ரூ லூயிஸ் எஸ்.ஜே. சூர்யாவின் அசிஸ்டெண்ட். படத்துக்கு இசையமைக்கும் சதீஷ் சக்ரவர்த்தி ஏ.ஆர். ரஹ்மானின் அசிஸ்டெண்ட்.
இருவரின் குருக்களும் இணைந்து இரண்டு ஹிட் கொடுத்திருக்கிறார்கள். சிஷ்யர்களும் ஹிட் கொடுப்பார்களா?
படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.