Publish Date: Tue, 30 Sep 2008 (14:06 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (14:06 IST)
பேய், பூதங்களில் நம்பிக்கை இல்லாத கதாநாயகி பல நூறு வருடங்களுக்கு முன்பு சித்தர் ஒருவரால் எழுதப்பட்ட ஓலைச் சுவடி ஒன்றை படிக்க நேர்கிறது.
அப்போது அதில் இருக்கும் அருவம் அவருக்குள் புகுந்து கொள்வதுடன் மூன்று பேரை கொலை செய்யவும் துhண்டுகிறது. ஏன், எதற்கு என்பதை த்ரில்லாக சொல்கிறது திரு மனசு.
மோகன் கிருஷ்ணா, காயத்ரி ராஜகோபால் ஆகியோர் நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள். கோவை பாபு இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நளினியும் உண்டு. மனோதத்துவ டாக்டராக வருகிறார்.
ஆர்.கே.எம். புரொடக்சன் சார்பில் எம்.எப். ரமேஷ் தயாரிக்க பி.ஜி. அனுஷங்கர் இயக்குகிறார். படத்தின் பெரும்பகுதி கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது.