கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை பாடலுக்கு ஆடிய ஸ்னிக்தா கைவசம் தற்போது கால் டஜன் படங்கள். மிஷ்கினின் நந்தலாலாவில் இவர்தான் நாயகி. இவரது நடிப்பை ஒவ்வொரு பேட்டியிலும் சிலாகிக்கிறார் மிஷ்கின்.ஷக்தி சிதம்பரம் இயக்கும் ராஜாதி ராஜாவில் ஆறு ஹீரோயின்களில் ஸ்னிக்தாவும் ஒருவர். ஏன்றாலும் படத்தில் இவருக்கே முக்கியத்துவம் என்கின்றன தகவல்கள்.
இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் லாரன்சுடன் ஜோடி சேர்கிறார் ஸ்னிக்தா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை சாய்ரமணி என்பவர் இயக்குகிறார். இவர் ஜனநாதனின் உதவியாளர்.
லாரன்சுக்கு இதில் இரண்டு வேடங்கள். ஒருவருக்கு ஸ்னிக்தா ஜோடி. இன்னொருவருக்கு ஜோடி தேடி வருகிறhர்கள்.