விஷ்ணுவர்தனின் சர்வம் படத்தில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடிக்கிறார் த்ரிஷா. ஆச்சரியம் இதுவல்ல. படத்தின் க்ளைமாக்ஸ்.
பீமா படத்தில் த்ரிஷா இறந்து போவதுபோல் காட்சி அமைத்தது அவரது நலம் விரும்பியவர்களுக்கு பிடிக்கவில்லை. இதுபோன்ற காட்சியில் இனி நடிக்கக் கூடாது என்ற அவர்களது கோரிக்கையை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் நினைப்பதெல்லாம் வாழ்க்கையில் நடப்பதில்லையே. சர்வம் க்ளைமாக்ஸில் த்ரிஷா இறப்பது போல் காட்சி வருகிறதாம்.
படத்துக்கு இதைவிட சிறந்த முடிவு இருக்க முடியாது என்பதால் வேறு வழியின்றி த்ரிஷாவும் ஒப்புக் கொண்டதாக கூறுகிறார்கள்.
த்ரிஷா ரசிகர்களுக்கு இது கசப்பான செய்திதான்.