Publish Date: Mon, 29 Sep 2008 (15:52 IST)
Updated Date: Mon, 29 Sep 2008 (15:51 IST)
மந்த்ரா என்றால் மந்த்ரா பேடி. கிரிக்கெட் வர்ணனையாளராக இந்தியர்களின் இதயத்தில் நுழைந்தவர். இவரை மன்மதன் மூலம் தமிழுக்கு அழைத்து வந்த பெருமைக்குரியவர் சிம்பு.
ஆனால் மன்மதனுக்குப் பிறகு இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
இது குறத்து கேட்டதற்கு மந்த்ரா சொன்ன பதில்,
தமிழில் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஏன் சூர்யாவுடன் மட்டும்?
சூர்யாவின் காக்க காக்க படம் பார்த்தாராம் மந்த்ரா. அதிலிருந்து சூர்யாவின் ரசிகராகிவிட்டாராம். அதுதான் சூர்யாவுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை.
இயக்குனர்கள் கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.