பேத்தாஸ் சாங் மட்டுமே எனக்கு பாட தருகிறார்கள் என்றொரு வருத்தம் இளையராஜாவுக்கு உண்டு. வெளிப்படையாக இதனை தனது மகன்களிடம் கூறியிருக்கிறார் இளையராஜா.
அதன் பிறகே பட்டியல் படத்தில் வரும் நம்ம காட்டுல பாடலை இளையராஜாவுக்கு அளித்தார் யுவன்.
இதன் அர்த்தம் இளையராஜா வாய்ப்பை கேட்டு பெற்றார் என்பதல்ல. பேத்தாஸ் சாங்கை தவிர்த்து டூயட் சமாச்சாரங்களும் தனக்கு பாட வரும் என்பதே இதன் பொருள்.
சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்காக ஒரு டூயட் பாடியிருக்கிறார் இளையராஜா. அவருடன் இணைந்து பாடியிருப்பது ஸ்ரேயா கோஷல்.
இளையராஜா பாட்டு.. அப்படீன்னா பாட்டு நிச்சயம் ஹிட்தான்.