அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஜீன்ஸ் - படமல்ல பெயரே இதுதான் - என்பவர் இயக்கியிருக்கும் படம் வேள்வி. இந்தப் படத்தைப் பற்றிதான் இப்போது இன்டஸ்ட்ரியில் பேச்சு.
ஹீரோயின் ஓரியண்ட் படமான இதில் நாயகியாக நடிப்பவர் ஹாசினி. வக்கீலுக்கு படிக்கும் இவரை சிலர் வஞ்சித்து விடுகிறார்கள்.
சட்டம் தெரிந்தவர் என்பதால் சட்டப்படி எதிரிகளை தண்டிப்பார் என்று நினைத்தால் அப்படி இல்லையாம். சட்டத்தை தானே கையிலைடுத்து வித்தியாசமான முறையில் பழிவாங்குகிறார்.
பழி வாங்க ஆக்சனுக்கு பதில் கிளாமரை கையிலைடுப்பதால் படம் நெடுக கிளு கிளு காட்சிகள். படத்தைப் பார்த்த சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
பாரதியின் புதுமைப் பெண்ணை மனதில் வைத்து ஹாசினியின் கதாபாத்திரத்தை உருவாக்கினாராம் இயக்குனர் ஜீன்ஸ்.
அப்படீன்னா படம் புதுமையாகத்தான் இருக்கும்.