Publish Date: Mon, 29 Sep 2008 (14:26 IST)
Updated Date: Mon, 29 Sep 2008 (14:25 IST)
அகராதியில் புரியாத புதிர் என்பதற்கு நேராக மீரா ஜாஸ்மின் என்று போடலாம். என்ன செய்வார் எப்போது செய்வார் யாருக்கும் தெரியாது.
முன்னணி ஹீரோக்களுடன் நடித்த இவர் தற்போது நடித்துக் கொண்டிருப்பது புதுமுகம் ஒருவருடன். பெயர் கஜன்.
எப்படி இதற்கு ஒத்துக் கொண்டார் மீரா?
கதைதான் காரணம் என்கிறார் படத்தின் இயக்குனர் வெற்றி வேந்தன். அது மட்டுமல்ல, காதல் காட்சிகளில் வியர்த்து விறுவிறுத்துப் போன ஹீரோவை தனியாக அழைத்து தைரியம் கூறி அவரது கூச்சத்தையும் போக்கியிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.
இந்தப் படத்தில் இரண்டாவது நாயகி ஒருவரும் இருக்கிறார். யோகிதா என்ற அவர் பி.காம். மாணவியாம்.