Publish Date: Mon, 29 Sep 2008 (14:24 IST)
Updated Date: Mon, 29 Sep 2008 (14:23 IST)
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. முதல் ஷெட்யூலை பாங்காக்கில் நடத்தி முடித்துள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.
பாங்காக் படப்பிடிப்பில் சரத்துடன் அவரது மகளாக நடிக்கும் ஸ்ரேயாவும் கலந்து கொண்டார். பாங்காக் காட்சிகள் முடிந்த நிலையில் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்ப தயாராகி வருகிறது ஜக்குபாய் யூனிட்.
அங்கு சில காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.