Publish Date: Mon, 29 Sep 2008 (14:23 IST)
Updated Date: Mon, 29 Sep 2008 (14:22 IST)
சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார்.
படத்தின் கதையை அஜித் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறினார் கௌதம். படத்தின் கதையில் இருவருக்கும் பூரண திருப்தி. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
சமீரா ரெட்டி அஜித் ஜோடியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் நீரவ்ஷா. இவர் கௌதம் வாசுதேவ மேனனின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது இதுவே முதல் முறை.
படத்துக்கு சுராங்கனி என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது.