Publish Date: Sat, 27 Sep 2008 (20:32 IST)
Updated Date: Sat, 27 Sep 2008 (20:32 IST)
இயக்குனர் ரமணாவிடம் உதவியாளராக இருந்த ராஜசேகர் இயக்கும் படம் குதிரை. நடிகர் நாசரின் மனைவி கமிலா இந்தப் படத்தை தயாரிக்கிறார். லோ பட்ஜெட் படமான இதற்கு பைனான்ஸ் செய்வது ராஜ் டிவி.
திரைப்படங்களை வாங்குவதில் தொலைக்காட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட போட்டியைத் தொடர்ந்து தனியார் சானல்கள் சொந்த படத்தாயாரிப்பில் இறங்கியுள்ளன. முதல்கட்டமாக படங்களின் மொத்த விநியோக உரிமைகளை வாங்குவதில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறது சன் டிவி.
சன்னைத் தொடர்ந்து ஸீ தொலைக்காட்சியும் நான் கடவுள் படத்தை 16 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த போட்டியை சமாளிக்க ராஜ் டிவி எடுத்திருக்கும் முதல் ஸ்டெப்தான் குதிரை படம்.
ரமணா இதில் ஹீரோவாக நடிக்கிறார்.