Publish Date: Sat, 27 Sep 2008 (17:30 IST)
Updated Date: Sat, 27 Sep 2008 (15:49 IST)
நவ்யா நாயர் அறிமுகமான நந்தனம் படம் தமிழில் ரீ-மேக்காக உள்ளது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ரஞ்சித் தமிழிலும் படத்தை இயக்குகிறார்.
ப்ருத்விராஜ், ரேவதி, நவ்யா நாயர் நடித்த இப்படம் வெகுளியான வேலைக்கார பெண்ணை பற்றியது. குருவாயூருக்கு அருகே வீட்டு வேலைக்காக வருகிறார் நவ்யா நாயர்.
இடைவிடாத வேலையின் காரணமாக குருவாயூர் கோயிலுக்கு போக வேண்டும் என்கிற அவரது ஆசை நிறைவேறாமல் தள்ளிப் போகிறது. இந்த எளிய பெண்ணிற்காக குருவாயூரப்பனே நேரில் வந்து காட்சி தருகிறார்.
அத்துடன் ப்ருத்விராஜுடனான காதல் எபிஸோடும் உண்டு.
தமிழில் ப்ருதிவிராஜும, ப்ரியாமணியும் நடிக்கின்றனர். இதில் கடவுளாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் தனுஷ்.