Publish Date: Sat, 27 Sep 2008 (14:41 IST)
Updated Date: Sat, 27 Sep 2008 (14:41 IST)
நேற்று மதுரை தவிர்த்து அனைத்து இடங்களிலும் காதலில் விழந்தேன் படம் வெளியானது.
மதுரை விநியோக உரிமையை வாங்கியவர் கடைசி நிமிடத்தில் பின்வாங்கியதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேரடியாக படத்தை வெளியிட முயன்றது.
பத்து திரையரங்குகளில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரவுடிகள் மிரட்டியதால் படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் திரையிடவில்லை.
இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குனர் பி.வி. பிரசாத், தமிழகத்தின் கர்நாடகமாக மதுரை மாறி வருகிறது என்றார். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
படத்தை திரையிடவிடாமல் மிரட்டிய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசை சன் பிக்சர்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.