Publish Date: Sat, 27 Sep 2008 (14:39 IST)
Updated Date: Sat, 27 Sep 2008 (14:38 IST)
இப்போதைக்கு கோலிவுட்டின் ஹாட் கேக் ஜெய். அரை டஜன் படங்கள் கைவசம் வைத்துள்ளார். அதிலொன்று ஓரம் போ புஷ்கர் காயத்திரியின் ராக்கோழி.
இதில் ஜெய் ஜோடியாக நடிப்பவர் லேகா வாஷிங்டன். ஜெயம் கொண்டானில் நடித்ததில் லேகாவுக்கு நல்ல பெயர். நாயகி பாவனாவை விட இவரைத்தான் அனைவரும் பாராட்டுகிறார்கள்.
மணிரத்னம் போன்றவர்களின் பாராட்டால் மகிழ்ந்து போயிருக்கும் லேகா விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிக்கயிருப்பதாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.
பாலிவுட் முயற்சி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் தமிழிலும் கவனம் செலுத்துகிறார் லேகா. ஓரம் போ படத்தை இயக்கிய புஷ்கர் காயத்திரியின் அடுத்த படமான ராக்கோழியில் இவர்தான் நாயகி.