Publish Date: Sat, 27 Sep 2008 (14:36 IST)
Updated Date: Sat, 27 Sep 2008 (14:36 IST)
சமுத்திரகனி இயக்கத்தில் சுப்ரமணியபுரம் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு கதாநாயகி கிடைத்து விட்டார்.
இந்தப் படத்துக்கு புதுமுகம்தான் வேண்டும் என்று பல மாதங்களாக தேடியலைந்தார் சமுத்திரகனி. தமிழ்நாட்டில் யாரும் அகப்படாமல் கேரளா சென்றார். அங்கு சமுத்திரகனியின் தேடலுக்கு பலன் கிடைத்தது.
பாஸிடிவ் மலையாளப் படத்தில் நடித்த ஆயில்யா சமுத்திகனியின் தேடலுக்கு உகந்த பெண்ணாக தெரிய அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆயில்யா பெயரில் மலையாள வாடை தூக்கலாக் இருப்பதால் விரைவில் பெயரை மாற்றப் போகிறார்களாம்.