Publish Date: Fri, 26 Sep 2008 (16:23 IST)
Updated Date: Fri, 26 Sep 2008 (16:22 IST)
இயக்குனர் மேஜர் ரவி இயக்குவதாக இருந்த கந்தகார் படம் தள்ளிப் போகிறது.
அரண் படத்தை எடுத்த ரவி அதற்குப் பிறகு மலையாளத்தில் இரண்டு படங்கள் முடித்து விட்டார். இரண்டாவது படமான குருஷேத்திரம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
இந்த படத்திற்கு முன்பே அவர் எடுப்பதாக இருந்த படம் கந்தகார். விமான கடத்தலை பின்புலமாகக் கொண்ட இப்படம் சில வருடங்களுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்.
குருஷேத்திரத்திற்குப் பிறகு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ரவி. இதுவும் ஆக்சன் பின்னணியில் அமைந்த கதைதானாம். படத்தை ஐடிஏ பிலிம்ஸ் சார்பில் ராஜா தயாரிக்கிறார்.