Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ர‌‌ஜினியை முந்திய விஜய் - கரு‌த்து‌க் க‌ணி‌ப்பு

Advertiesment
ர‌‌ஜினியை முந்திய விஜய் - கரு‌த்து‌க் க‌ணி‌ப்பு
, வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (18:08 IST)
லயோலா கல்லூரி அவ்வப்போது கருத்து‌க் கணிப்பு நடத்தும். இந்தமுறை நிறைய சுவாரஸியங்கள். முன்னணி கதாநாயர்களை புறந்தள்ளியிருக்கிறார்கள் மறைந்த முன்னாள் நடிகர்கள். நடிகைகளிலும் புதுசை விட பழசையே அதிகம் பேர் விரும்புகிறார்கள் என்பது இன்னொரு ஆச்ச‌ரியம்.

நடிகர்களில் வழக்கம் போல எம்‌ஜிஆருக்கு முதலிடம். 21.3 சதவீதம் பேர் இவருக்கு வாக்களித்துள்ளனர். இவரது படங்களில் மக்களுக்கு பிடித்தது நாடோடி மன்னன். இரண்டாம் இடம் சிவா‌ஜிக்கு. பிடித்த படம் பாசமலர். கிடைத்த சதவீதம் 18.9.

முதல் முறையாக ர‌‌ஜினியை முந்தியிருக்கிறார் விஜய். இவருக்கு கிடைத்திருப்பது 16.4 சதவீத ஓட்டுகள். ர‌ஜினிக்கு 16.2. விஜய் படங்களில் கில்லியையும், ர‌ஜினி படங்களில் பாட்ஷாவையும் பிடித்த படங்களாக தேர்வு செய்துள்ளார்கள் ஜனங்கள். விஜயகாந்த் ஐந்தாவது இடத்தில் உள்ளார். பிடித்த படம் கேப்டன் பிரபாகரன்.

நடிகைகளில் முதல் இடத்தை சரோஜாதேவியும், இரண்டாம் இடத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், மூன்றாம் இடத்தை கே.ஆர். விஜயாவும் பிடித்துள்ளனர். இவர்களுக்கு பிறகே வருகிறார்கள் புதிய நடிகைகள். நான்காம் இடத்தை ஜோதிகாவும், ஐந்தாம் இடத்தை குஷ்புவும் கைப்பற்றியுள்ளனர்.

ஓல்டு இஸ் கோல்டு என்பது இதுதானா?

Share this Story:

Follow Webdunia tamil