பாண்டி படத்தை இயக்கிய ராசு மதுரவன் அடுத்து இயக்கும் படம் மாயாண்டி குடும்பத்தார்.
பெயரை கேட்கும் போதே இதுவொரு உண்மைச் சம்பவம் என்பது தெரியவரும். படத்தின் கதை மதுரை சோழவந்தான் அருகே நிஜமாக நடந்த சம்பவமாம்.
இளம் இயக்குனர்கள் சேர்ந்து நடிப்பது தற்போது அதிகரித்துள்ளது. சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் சசிகுமார் இணைந்து நடித்திருந்தனர். இயக்குனர் மணிவண்ணன், சுந்தர்ராஜன் போன்றோர் முழுநேர நடிகர்களாகிவிட்டனர்.
மாயாண்டி குடும்பத்தாரில் இன்னொரு விசேஷம். அதாவது இந்தப் படத்தில் முதல் முறையாக பத்து இயக்குனர்கள் இணைந்து நடிக்கப் போகிறார்கள். சீமான், தருண்கோபி, ரவிமரியா, மணிவண்ணன் என்று போகிறது பட்டியல்.
அண்ணாமலை பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது.