Publish Date: Fri, 26 Sep 2008 (15:48 IST)
Updated Date: Fri, 26 Sep 2008 (15:48 IST)
ஸ்ரீகாந்தும், நவ்யா நாயரும் நடிக்கும் படம் ரசிக்கும் சீமானே. ஆர்.கே. வித்யாதரன் இயக்கம். இவர் வைத்தீஸ்வரன் படத்தை இயக்கியவர்.
இந்தப் படத்தில் பிளாக் மெயிலராக நடித்துள்ளார் ஸ்ரீகாந்த். இசையமைத்திருப்பவர் விஜய் ஆன்டனி. டைலமோ, நாக்க முக்க போன்ற கலைச் சொற்களை தமிழுக்கு தந்த இவரது அடுத்த வெடி நச்சலோ.
அது என்ன நச்சலோ?
பஞ்சாபி வார்த்தையாம். இதை வைத்து அசத்தல் டியூன் ஒன்றை போட்டு அசத்தியிருக்கிறார். படத்தில் வில்லன்களாக நடித்திருப்பவர்கள் காதல் தண்டபாணி, போஸ் வெங்கட். காமெடிக்கு சத்யன், மயில்சாமி, தாமு, வாசு விக்ரம், பாண்டு என்று பெரிய டீமே இருக்கிறது.
ரசிக்கும் சீமானே பாடல் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.