பழைய செய்திதான் ஆனால் இன்னும் கிக் குறையாமல் இருக்கிறது.
விக்னேஷ் என்ற விக்னேஷ்வரன் நடிக்கும் குடியரசு படம் ஒரு பத்திரிகையாளனின் நேர்மையை பற்றியது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை நடக்கும் சம்பவங்களே கதை.
விக்னேஷ்வரனுடன் படத்தின் தயாரிப்பாளர் சத்யநாராயணாவும், இயக்குனர் சுபிர் ஹுசைனும் நடிக்கின்றனர். அடிக்கின்றனர் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
இவர்கள் இருவருமே கிக் பாக்ஸர்கள். அதுவும் தொழில்முறை கிக் பாக்ஸர்கள். இவர்களுக்கு தீனி போடுவதற்காகவே ஜப்பான் சாமுராய் வாள்சண்டை, நுன் சாக் சண்டை என்று விதவிதமான சண்டை காட்சிகளை வைத்துள்ளனர்.
இவர்களுக்கு போட்டியாக விக்னேஷ்வரனும் சண்டை போடுகிறார்.
குடியரசுக்கு பதில் அடியரசு என்று வைத்திருக்கலாம்.