உள்ளூர் விற்பனைக்கு இணையாக படங்களின் வெளிநாட்டு உரிமையும் விலை போகின்றன. குறிப்பாக அமெரிக்க விற்பனை உரிமை.
விரைவில் வெளியாக இருக்கும் வாரணம் ஆயிரம், அஜித்தின் ஏகன், விஜயின் வில்லு, விக்ரமின் கந்தசாமி ஆகிய படங்களின் அமெரிக்க உரிமை அதிகவிலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.
மெகா பட்ஜெட் படங்களான இவற்றின் விநியோக உரிமையை வாங்கியிருப்பது விநியோகத் துறையில் முன்னணியில் இருக்கும் பாரத் கிரியேஷன்ஸ்.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடு விளையாடு போன்ற படங்களின் விநியோக உரிமையையும் இந்நிறுவனமே வாங்கியிருந்தது குறிப்பிடதக்கது.