Publish Date: Thu, 25 Sep 2008 (19:53 IST)
Updated Date: Thu, 25 Sep 2008 (19:52 IST)
ஒருசில படங்களில் தலைகாட்டிய பிறகு காணாமல் போன தீபு மீண்டும் தமிழ் சினிமாவில். தீபுவை மீண்டும் தமிழுக்கு அழைத்து வரும் படம் தைரியம்.
தீபு இதில் இரண்டாவது கதாநாயகி. தூத்துகுடி கார்த்திகா முதன்மை நாயகி. புதுமுகம் ஒருவர் நாயகன். பெயர் குமரன். இரண்டு ஹீரோயின்கள், ஒரு ஹீரோ.
முக்கோண காதல் கதை என்று யாரும் அவசரமாக முடிவெடுத்தால் தப்பு. படத்தில் மூன்றாவதாக ஒருவரும் இருக்கிறார். அவர் பிரகதி.
காதல் சென்டிமென்டுடன் படத்தை கமர்ஷியலாக எடுக்கிறார்கள்.
இறுதியாக ஒன்று. தீபு யார் என்று தலையை பிய்த்துக் கொள்கிறவர்களுக்கு.. ஜெயம் ரவியின் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியில் அவரது தங்கையாக நடித்தாரே, அவரேதான்.