Publish Date: Thu, 25 Sep 2008 (15:28 IST)
Updated Date: Thu, 25 Sep 2008 (15:26 IST)
பரீட்சார்த்த முயற்சிகளை தொடர்ந்து செய்பவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. படங்கள் தோல்வியடைவது இவருக்கு பொருட்டல்ல.
சமிபத்தில் வெளிவந்த இவரது படம், பூங்க். த்ரில்லர் படமான இது வெளியான போது பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்தார் வர்மா. படத்தை தனியாக பார்ப்பவர்களுக்கு பரிசு ஐந்து லட்சம்.
படம் வெளியான சில நாட்களுக்கு போட்டிக்கு யாரும் வரவில்லை. வர்மா விடுத்த சவாலுக்கு செவிசாய்த்தவர்கள் சிலர் மட்டுமே. அதில் வென்றவர்கள் இரண்டு பேர்.
வர்மாவின் இந்த த்ரில் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி ரீ-மேக் செய்துள்ளார். அப்படம் விரைவில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளது.
வர்மாவின் முதல் படமான சிவா தமிழில் உதயம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. பூஙக் அந்த மேஜிக்கை மீண்டும் நடத்துமா?