பாடலாசிரியர் பா. விஜய் முதல் முதலாக கதாநாயகனாக நடிக்கும் படம் தாய் காவியம்.
ரஷ்ய நாவலாசிரியர் மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலை கவிதை நடையில் சில காலம் முன்பு தமிழில் எழுதினார் முதல்வர் கருணாநிதி. அதன் அடிப்படையில் தாய் காவியத்தை எடுத்து வருகிறார்கள்.
படத்தின் பாடல் காட்சிகளில் இரண்டு சீனாவில் படமாக்கப்பட்டது. பிறகு கதையில் சில திருத்தங்கள் செய்வதற்காக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது தாய் காவியம் யூனிட் கதையில் முழு திருப்தி அடைந்துள்ளது. படப்பிடிப்பும் தடையின்றி நடந்து வருவதால் படம் விரைவில் முடிந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் படத்தின் நாயகனான பா. விஜய்.
படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளதால் பாடல் எழுதுவதை நிறுத்தவில்லை இவர். தொடர்ந்து நடித்தாலும் பாடல் எழுதுவதை மட்டும் கைவிட மாட்டாராம்.
கவித்துவமான முடிவு.