அயனில் இந்திப் படவுலகைச் சேர்ந்த ஆகாஷ் தீப் சைகலை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கே.வி. ஆனந்த். அய்யனார் சிலைபோல் ஆறடிக்கு மேலிருக்கும் ஆகாஷ், அயனின் வில்லன்.
தமிழுக்கு இவரது நாக்கு இன்னும் வணங்கவில்லை. ஆனால், சண்டைக் காட்சிகளில் ஆள் பின்னுகிறார்.
அயனின் கிளைமாக்ஸ் சண்டையை தென் ஆப்ரிக்காவில் எடுக்கிறார்கள். தனது சிக்ஸ் அப்ஸ் உடம்புடன் ஆகாஷுடன் மோதுகிறார் சூர்யா. சண்டைக் காட்சியை அமைப்பவர், கனல் கண்ணன்.
கனா கண்டேனுக்கு நேர் எதிராக அயனை முழுக்க ஆக்சன் பின்னணியில் எடுத்து வருகிறார் ஆனந்த்.