நாளை வாரணம் ஆயிரம் படத்தின் இசை வெளியீடு. சோனி பி.எம்.ஜி. இசையை வெளியிடுகிறது.
வாரணம் ஆயிரம் தொடங்கிய போது குறைவான தொகைக்கு அதன் ஆடியோ உரிமையை விற்றதாகவும், தற்போது அதைவிட அதிகமான விலைக்கு வேறொரு நிறுவனம் ஆடியோ உரிமையை கேட்பதாகவும் கூறப்பட்டது.
படத்தின் இசை வெளியிடப்படாமல் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் வதந்தி கிளம்பியது.
சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், படம் வெளியாகும் அன்றே இசையும் வெளியிடப்படுகிறது என்று கிளப்பிவிட்டனர். படம் யானை என்றால் பாடல்கள் மணியோசை.
தமிழ் சினிமா வரலாற்றில் பல யானைகளுக்கு மணியோசையை வைத்துதான் மரியாதை. அப்படியிருக்க, வாரணம் ஆயிரம் இசையை முன்னதாக வெளியிடாமல் இருப்பார்களா?
நாளை இசை வெளியீட்டை நடத்தி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளார் தயாரிப்பாளர்.