Publish Date: Tue, 23 Sep 2008 (19:07 IST)
Updated Date: Tue, 23 Sep 2008 (18:57 IST)
கமலின் சரித்திரப் படம் மர்மயோகியில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.
மர்மயோகி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வெங்கடேஷை அணுகியிருக்கிறார்கள்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷ் முதலில் தயங்கியிருக்கிறார். கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்துள்ளார்கள்.
தெலுங்கில் வெங்கடேஷின் ஸ்டார் வேல்யூ அபரிமிதமானது. மர்மயோகி வியாபாரத்திற்கு அது கூடுதல் பலம்.
வெங்கடேஷ் மர்மயோகியில் நடிப்பது குறித்து இன்னும் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.