Publish Date: Tue, 23 Sep 2008 (19:07 IST)
Updated Date: Tue, 23 Sep 2008 (18:55 IST)
சரோஜா படத்தில் நடித்தவங்களும், படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவும் படம் ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர். தமிழகம் முழுக்க ரசிகர்களை சந்திக்க சரோஜா டீம் திட்டமிட்டுள்ளது.
சென்னை திரையரங்கு ஒன்றில் ரசிகர்களிடம் பேசிய வெங்கட்பிரபு தனது ரகசிய ஆசை ஒன்றை வெளியிட்டார்.
என்னுடைய தந்தை (கங்கை அமரன்) கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அனதால் கிராமம் சம்பந்தப்பட்ட படங்களை எடுத்தார். நான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமம் பற்றி தெரியாது. அதனால் நகரம் சம்பந்தப்பட்ட கதைகளை படமாக்குகிறேன்.
அதேநேரம், அப்பாவை போல் கிராமத்து கதையை படமாக்க ஆசை உள்ளது. விரைவில் கிராமம் சார்ந்த கதையை படமாக்குவேன் என்றார் வெங்கட்பிரபு.
படம் மாதிரி கிராமம் மாதிரி இருக்குமா?