Publish Date: Tue, 23 Sep 2008 (19:07 IST)
Updated Date: Tue, 23 Sep 2008 (18:46 IST)
திருவண்ணாமலையில் பக்தி மணம் கமழ ஒரு பாடலை எடுத்தார் பேரரசு. கிரிவலப் பாதை, பாதையயோர கடவுள்கள் என அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது இப்பாடலில்.
பக்தியை சமன் செய்ய ராஜஸ்தானில் டூயட் ஒன்றை படமாக்கினார்.
சொல்ல சொல்ல இனிக்கும் - காதலை
சொல்ல சொல்ல இனிக்கும்
என்ற அந்த மெலடி பாடலை எழுதியவர் பேரரசு. ஸ்ரீகாந்த் தேவா இசை. அர்ஜுன், பூஜா காந்தி இந்தப் பாடலுக்கு ஆடினர்.
குத்து பாடல்கள் மட்டுமே எழுதுவார் என்ற பேரரசுவின் இமேஜை மாற்றியமைப்பது போல் இருக்குமாம் இந்தப் பாடல்.
திருவண்ணாமலை முடிந்ததும் தனது சொந்த பட நிறுவனம் மேஜிக்மைண்ட் சார்பில் பரத் நடிக்கும் திருத்தணி படத்தை தயாரித்து இயக்குகிறார் பேரரசு.