Publish Date: Sat, 20 Sep 2008 (18:37 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (18:37 IST)
பாடகர், நடிகர், தயாரிப்பாளர்... மூன்று முகத்துடன் எஸ்.பி.பி. சரணுக்கு இன்னொரு முகமும் சேரப் போகிறது.
தயாரிப்பாளராக சில தோல்விகளை அதிலிருந்து மீட்டது அவரது நண்பர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600 028.
தற்போது குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை தயாரித்து வரும் சரண், தோழன் வழியில் படம் இயக்கும் தனது ஆசையை வெளியிட்டுள்ளார்.
ஆம், விரைவில் இயக்குனராகிறார் சரண்.
தயாரிப்பாளர் இயக்குனராக விரும்பினால் அவரை தடுக்க யார் இருக்கிறார்கள். வெல்கம் போர்ட் வைத்து வரவேற்போம் சரணை!