Publish Date: Sat, 20 Sep 2008 (18:29 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (18:19 IST)
உயர் மட்டப் பாதுகாப்பில் இருக்கும் இடம் IMA எனப்படும் இந்தியன் மிலிட்டரி அகாடமி. அனுமதி இன்றி ஈ, காகா நுழைய முடியாத ராணுவக் கோட்டை.
தமிழ் சினிமா சரித்திரத்தில் முதல் முறையாக இங்கு வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருப்பது சாதனை. சூர்யா ராணுவ அதிகாரிகளுடன் வரும் காட்சிகளை நிஜமான ராணுவ அதிகாரிகளுடன் படம் பிடித்துள்ளார் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன்.
இதற்கு முன் இங்கு படமாக்கப்பட்ட ஒரே இந்திய படம் லக்ஷயா.
படத்தை எப்போ கண்ணுல காட்டப் போறீங்க கெளதம் சார்?