பழைய படங்களின் பெயர்களை யாரும் விடுவதாயில்லை. அதிலும் எம்.ஜி.ஆர்., ரஜினி நடித்த படங்களின் பெயர்களுக்கு கடும் கிராக்கி.
சதிலீலாவதி, நம் நாடு, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், வேட்டைக்காரன் என முக்கியமான படங்களின் பெயர்களை ஏற்கனவே பயன்படுத்திவிட்டனர். புதிதாக எங்க வீட்டு பிள்ளை.
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த இந்தப் படத்தை விஜயா வாஹினி தயாரித்தது. நீண்ட காலம் படத் தயாரிப்பிலிருந்து விலகியிருந்த இவர்கள் அறிமுக இயக்குனர் பத்ரி இயக்கும் படத்தை தயாரிக்கிறார்கள். பி. வாசுவின் மகன் ஷக்தி ஹீரோ. படத்துக்கு பெயர் எங்க வீட்டு பிள்ளை.
பெயர் ஒன்று என்றாலும் கதை வேறாம்.