செளந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து படத் தயாரிப்பில் இறங்கியிருப்பது பழைய செய்தி.
வெங்கட் பிரபு புதுமுகங்களை வைத்து இயக்கும் 'கோவா' இந்த கூட்டுத் தயாரிப்பின் முதல் படமாக இருக்கும்.
தமிழின் திறமையான இயக்குனர்களை குறிவைத்து தயாரிப்பு வேலைகளில் இறங்கியிருக்கும் செளந்தர்யா, தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறார்.
மகேஷ் பாபு நடிக்க பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில படங்களை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.