Publish Date: Fri, 19 Sep 2008 (16:16 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (16:16 IST)
டி.ஆர். கார்டனில் அரங்கு அமைத்து நந்தலாலாவின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார் மிஷ்கின். அறுபது சதவீத படம் நிறைவடைந்துவிட்டது.
உணர்வுப்பூர்வமான நந்தலாலாவை இயக்குகிறவர், ஏற்கனவே கூறியபடி சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை இயக்குகிறார். Sci-Fi படமான இதில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார்.
மிகுந்த பொருட்செலவு பிடிக்கும் இந்த சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை தயாரிக்க யு டி.வி. மோஷன் பிக்சர்ஸ் முன்வந்துள்ளது. படத்துக்கு முகமூடி என பெயர் வைத்துள்ளார்.
ரோபோவுக்கு முன்னால் மிஷ்கின் படம் வெளியானால் தமிழின் முதல் Sci-Fi படம் என்ற பெருமை கிடைக்கும்!