Publish Date: Thu, 18 Sep 2008 (20:18 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
முத்து, அண்ணாமலை உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் பிரபாகர். கர்நாடகாவைச் சேர்ந்த இவரது மகன் வினோத் மனோகர்.
ஆறடி உயரத்துக்கு மேல் ஆஜானுபாகுவாக அப்பாவைப் போலிருக்கும் வினோத் மனோகர் தமிழில் அறிமுகமாகும் படம் பாலை. பெயரைப் போல கதையும் கொஞ்சம் சூடானதுதான். அதாவது ஒரு அடாவடி ரவுடியைப் பற்றியது.
வினோத் மனோகரின் தோற்றத்துக்கு ஏற்ற இந்த கதையை படமாக்குகிறவர் இயக்குனர் ஏசி. விசானந்தா. ஹீரோவோ, ஆண்ட்டி ஹீரோவோ... கேரக்டர் நன்றாக இருந்தால் எப்படியும் நடிக்க தயார் என்கிறார் வினோத் மனோகர்.
பிழைக்கத் தெரிந்த பிள்ளை!