Publish Date: Thu, 18 Sep 2008 (20:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
தெய்வீக ராகம்... ஜென்சியின் குரலில் இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் பரவசம் கொள்ளும். இந்தப் பாடல் மட்டுமல்ல, ஜென்சியின் எந்தப் பாடலும் மனதை மயக்கக் கூடியது.
திருமணமாகி கணவன் குழந்தைகளுடன் கேரளாவில் செட்டிலான ஜென்சிக்கு மீண்டும் திரையில் பாட ஆசை. பிரபல வார இதழ் ஒன்றில் தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் ஜென்சி. பேட்டிக்கு கை மேல் பலன்.
சச்சின், ஆணிவேர் படங்களை இயக்கிய ஜானின் அடுத்தப் படத்தில் ஜென்சி பாடுகிறார். அவரை பாட வைப்பவர் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.
மீண்டும் ஜென்சியின் தெய்வீக குரல் திரையில்... ஜென்சி ரசிகர்களுக்கு இது காதில் தேன் பாயும் செய்தி.