Publish Date: Thu, 18 Sep 2008 (20:06 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
சென்னை 600028 படத்தைப் பார்த்து வெங்கட்பிரபுவை பாராட்டியதோடு, பாஸ், நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று அவருக்கு நம்பிக்கை அளித்திருந்தார் அஜித். அவ்வப்போது போனிலும் நேரிலும் வெங்கட்பிரபுவை உற்சாகப்படுத்தவும் அஜித் தவறவில்லை.
சரோஜாவுக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்தது. அவர் சொன்ன கதை அஜித்திற்கு ஓ.கே. தயாரிப்பாளர்களுக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லாததால் இருவரும் இணையும் புராஜெக்ட் தள்ளிப்போனது.
வெங்கட்பிரபு புதுமுகங்களை வைத்து கோவா படத்தை இயக்குவதில் முனைப்பாக உள்ளார். ஏகனுக்குப் பிறகு, கெளதம் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்.
இப்போதைய கேள்வி, வெங்கட்பிரபு - அஜித் கூட்டணி இணையுமா?
இணையும்! அதற்கான நம்பிக்கை இன்னும் தூர்ந்து போகவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் அஜித். சரோஜா படத்தைப் பார்த்த அஜித், வெங்கட்பிரபுவை பாராட்டியதோடு, நாம கண்டிப்பாக படம் பண்றோம் என்று பழைய நம்பிக்கையை பலப்படுத்தியிருக்கிறார்.
லேட்டானாலும் இந்த 'ஹாட்'டான கூட்டணி சேர்ந்து படம் பண்ணுவது உறுதி.