Publish Date: Thu, 18 Sep 2008 (16:36 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
பிரமிட் சாய்மீரா, ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் மர்மயோகியின் முதல்கட்ட போட்டோ செஷன் சென்னையில் தொடங்கியது.
சரித்திர கதையான இதில் கமலுடன் த்ரிஷா, ஸ்ரேயா நடிக்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்த போட்டோ செஷனில் மூவரும் கலந்து கொண்டனர்.
கமல் போர் வீரர்களுக்குரிய உடையும், த்ரிஷா, ஸ்ரேயா இளவரசிகளுக்குரிய உடைகளும் அணிந்திருந்தனர். இன்னும் சில நாட்கள் போட்டோ செஷன் தொடரும் என்று கூறப்படுகிறது.
இந்த போட்டோசெஷன் குறித்து தயாரிப்பு தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.