Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி. ஆரும் காரும்!

Advertiesment
டி. ஆரும் காரும்!
, புதன், 17 செப்டம்பர் 2008 (18:15 IST)
அரசியலில் பரபரப்பையும், சினிமாவில் சலசலப்பையும் உண்டு பண்ணிக் கொண்டிருக்கும் விஜய டி. ராஜேந்தர் தற்போது பெரும் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

சென்னையை அடுத்த மங்களம் என்ற ஊரில் சிம்புவின் கார் மோதி தேவராஜ் என்பவர் இறந்துபோக, போலீஸ் கேஸாகியிருக்கிறது.

இந்த விபத்துக்கும், என் இரண்டு பிள்ளைகளுக்கும் தொடர்பில்லை என்று டி.ஆர். சொல்ல, காரில் அவரின் இரண்டாவது மகன் குறளரசன் இருந்ததாக அக்கிராமத்தினர் சொல்ல அரண்டு போயிருக்கிறார்.

வழக்கம்போல அரசியல் கட்சிகள் சொல்வது போல இது எதிர்கட்சியின் சதி என்கிற ரீதியில் என் மகன் சிம்புவை மாட்டிவிட பெரிய இடத்து தூண்டுதலின் பேரில் சதி நடக்கிறது என்கிறார்.

எது எப்படியோ இறந்துபோன தேவராஜ் குடும்பத்தினருக்கு உரிய உதவித்தொகை வழங்க வேண்டுமென்பது கிராமத்தினரின் கோரிக்கை. மேடைகளிலும், சினிமாவிலும் வீரவசனம் பேசி, மனிதநேயத்துக்கு குரல் கொடுக்கும் டி.ஆர். கிள்ளிக் கொடுக்காமல், அள்ளிக் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இருப்பினும்... சாப்பிட அண்ணா சாலைக்குத்தான் குறளரசன் கார் எடுத்துச் சென்றான் என்று சொல்லும் டி.ஆர்., உத்திரமேரூருக்கு கார் எதற்கு சென்றது என்ற போலீஸின் கேள்விக்கு எ‌ன்ன பதில் சொல்லப் போகிறார்?

கடத்தல் என்பதெல்லாம் கதை என்று திட்டவட்டமாக மறுக்கிறது போலீஸ். நல்ல மனிதருக்கு பாவம் இப்படி ஒரு கெட்டப் பெயர்.

Share this Story:

Follow Webdunia tamil