Publish Date: Wed, 17 Sep 2008 (18:07 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
ஜே.கே. ரித்தீஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்க, ரமணா ஹீரோவாக நடித்து தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படம் நாயகன். அந்தப் படத்தில் நடித்ததைப் பார்த்த பல இயக்குனர்கள் ரமணாவை பாராட்டியிருக்கின்றனர்.
தெலுங்கில் நான்கைந்து படங்களும், தமிழில் இரண்டு படங்கள் நடித்தும் கிடைக்காத பெயர் இந்த நாயகன் மூலம் கிடைத்திருக்கிறது. எப்படியும் நல்ல நடிகனாகவும், ஆக்சன் ஹீரோவாகவும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையில் உடற்பயிற்சி மூலம் உடம்பை குறைத்து கட்டுமஸ்தாக்கியிருக்கிறார்.
அடுத்ததாக தமிழன், கி.மு. படங்களை இயக்கிய மஜித் இயக்கிய 'துணிச்சல்' படத்தில் அருண் விஜயோடு நடித்திருக்கிறார். அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து 'அஜந்தா' நாலு மொழிகளில் மிகவும் பிரமாண்டமான முறையில் எடுக்கப்படும் படம். இசை ஞானி இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் நடித்திருக்கும் ரமணா, அந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் இனிமை. கண்டிப்பாக அஜந்தா என் கனவுகளை நிறைவேற்றும் படமாக இருக்கும் என்று சத்தியமே செய்கிறார். பார்ப்போம்...