Publish Date: Tue, 16 Sep 2008 (19:01 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
தமிழ் சினிமாவில் தற்போது இரண்டு படங்களைப் பற்றித்தான் சதா பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்று 'நாக்க முக்கா' பாடல் இடம்பெற்ற 'காதலில் விழுந்தேன்' படம். இரண்டாவதாக 'டாக்ஸி... டாக்ஸி' பாடல் இடம்பெற்ற 'சக்கரக்கட்டி'.
இவ்விரண்டு பாடல்களுமே மிகவும் சூப்பர் ஹிட்டாக, முன்பு எடுத்ததை தூக்கிவிட்டு... பிரமாண்டமான முறையில் ரீ-ஷூட் செய்திருக்கிறார்கள். இவ்விரண்டு படங்களின் இயக்குனர்களான பிரகாஷும், கலாபிரபுவும்.
மேலும், டாக்ஸி... டாக்ஸி பாடலைக் கேட்ட இந்தி இயக்குனர் ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டியதோடு, அந்தப் படத்துக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் ஷோபிக்கு தனது இந்தி படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
அத்தோடு மட்டுமில்லாமல், சக்கரக்கட்டி என்று இருந்த படத்தின் பெயரை ஒற்றெழுத்தான 'க்'கை சேர்க்க வேண்டும். அதுதான் சரியென்று முதல்வர் கலைஞர் சொல்ல, இனிவரும் விளம்பரங்களில் 'க்' சேர்க்கப்பட்டு 'சக்கரக்கட்டி'யாக வர இருக்கிறது.