Publish Date: Tue, 16 Sep 2008 (18:00 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
இனி புது ஹீரோக்களை வைத்து படங்களை இயக்குவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். இவரை இப்படி முடிவெடுக்க வைத்த படம் 'சிங்கக்குட்டி'.
நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமாரின் வாரிசை வைத்து படம் எடுக்க, படம் சரியான அடி. வெங்கடேஷ் மிகப்பெரிய ஹிட் படம் கொடுக்காவிட்டாலும், தயாரிப்பாளரைக் காப்பாற்றும் இயக்குனம் என்று பெயரெடுத்திருப்பவர்.
தற்போது அர்ஜுனை வைத்து இயக்கிய 'துரை' படம் ரிலீஸாக உள்ள நிலையில்... 'வாடா' என்ற படத்தை சுந்தர் சி-யை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.
வித்தியாசமான படம் எடுப்பவர் என்பதோடு, இப்படி 'ஏய்', 'வாடா' என்று பெயர் வைப்பதிலும் கில்லாடியாக இருக்கிறார். சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தில் ஏய் என்று கூப்பிடுவதால் என்ன நடக்கிறதோ அதேபோல 'வாடா' என்று கூப்பிடுகிற ஒரு வார்த்தையில்தான் படத்தின் கதையே இருக்கிறதாம்.
கதை, படத்தின் பெயர் எப்படி இருந்தாலும், இரண்டரை மணி நேரம் தியேட்டரில் உட்கார வைத்து ரசிக்க வைப்பதற்காக பாராட்டலாம்.