பத்து கோடி ரூபாய் செலவு செய்து நாயகன் படத்தை எடுத்தாலும் பெரிய அளவில் வசூல் இல்லை. அப்படி வசூல் வரவில்லை என்றாலும் கவலைப்படாதவர் ஜே.கே. ரித்தீஸ். சென்னை மற்றும் பல ஊர்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் தனது சொந்த மாவட்டத்தின் மக்கள் அதிகம் படம் பார்க்கவில்லை என்ற தகவல் வர மிகவும் வருத்தத்தில் உள்ளார் நாயகன்.
அதனால் அடுத்த படம் இன்னும் தெளிவாக, சொந்த மாவட்டத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படம் இருக்க வேண்டும் என்பதற்காக இன்னும் நல்ல கதைகளாகத் தேடி வருகிறார். என்னை தமிழ்நாட்டு மக்கள் ரசிப்பதைவிட என் மாவட்டத்து ஜனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் படமே நடிக்க வந்தேன் என்று நண்பர்கள் வட்டாரத்தில் ஆதங்கத்தை கொட்டிவருகிறார்.
அதிரடியான இவரின் முடிவால் எங்கே படம் நடிக்காமல் போய்விடுவாரோ என்று காமெடி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.